வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

0 1446

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி, கரூர், நாமக்கல், திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஜூலை 24 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 24 மணி நேரத்தில்  ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.

குமரிக்கடல் பகுதியில் இரு நாட்களுக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments