ஆற்றுப் பாலத்தின் ஓரம் நடந்து சென்ற போது ஆற்றில் தவறி விழுந்த முதியவர்-குதித்து காப்பாற்றிய இளைஞர்கள்
காரைக்காலில் ஆற்றுப் பாலத்தின் ஓரம் நடந்து சென்றபோது ஆற்றில் தவறி விழுந்த முதியவரை இளைஞர்கள் இரண்டு பேர் ஆற்றில் குதித்து காப்பாற்றினர்.
திருநள்ளாறு சாலையில் உள்ள வாஞ்சியாற்று பாலத்தின் ஓரம் முதியவர் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்த போது வெயிலின் தாக்கத்தாலும், வயது முதிர்வாலும் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்தார். இதனை கண்ட அந்த வழியாக வந்த இளைஞர்கள் இரண்டு பேர் சற்றும் எதிர்பாராமல் ஆற்றில் குதித்து தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த முதியவரை மீட்டனர்.
Comments