நகராட்சி தலைவரின் கணவர் உள்பட 4 பேரை கத்தியால் குத்தியதாக 3 பேர் கைது.!

0 1068

மதுரை திருமங்கலத்தில் நகராட்சி தலைவரின் கணவர் உள்பட 4 பேரை கத்தியால் குத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருமங்கலத்தில் என்ஜிஓ நகர் பாலத்தில் நின்று கொண்டிருந்த 5-வது வார்டு திமுக கவுன்சிலர் திருக்குமார், அவரது சகோதரரான நகராட்சி தலைவி ரம்யாவின் கணவர் முத்துக்குமார் ஆகியோர் மீது கார் ஒன்று மோத முயன்றுள்ளது.

அப்போது ஏற்பட்ட தகராறில், காரில் வந்தவர்கள் கத்தியால் குத்தியதில் முத்துக்குமார் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமரின் மகன் முகேஷ் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments