காமன்வெல்த் போட்டியில் வீரர்கள் முழு திறமையுடன் சிறப்பாக விளையாட வேண்டும்-பிரதமர் மோடி

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், தங்களது முழு திறமையுடன் சிறப்பாக விளையாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
பர்மிங்ஹாமில் ஜூலை 28 ஆம் தேதி தொடங்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் மற்றும் பயற்சியாளர்களுடன் பிரதமர் மோடி காணொலியில் கலந்துரையாடினார்.
எதிர்பார்ப்புகளை மறந்துவிட்டு, எவ்வித அழுத்தமும் இன்றி, முழு திறமையுடன் விளையாடுமாறு வீரர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இந்த கலந்துரையாடலில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஹாக்கி மகளிர் அணி கோல்கீப்பர் சவீதா பூனியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Comments