மாமூல் கொடுக்கலைன்னா நேரா கடத்தல் தான்.. வியாபாரிக்கு நேர்ந்த கொடுமை..!

0 2183
மாமூல் கொடுக்கலைன்னா நேரா கடத்தல் தான்.. வியாபாரிக்கு நேர்ந்த கொடுமை..!

பல்லாவரம் அருகில் மாமூல் கேட்டு தர மறுத்த மளிகை கடை உரிமையாளர் மகனை கத்தி முனையில் கடத்திச் சென்று சித்ரவதை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது...

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வருபவர் சசிகுமார். இவர் தனது மகன் யோகேஸ்வரனுடன் அனகாபுத்தூர் பஜார் சாலையில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு இரண்டு நபர்கள் கடைக்கு சென்று மாமுல் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். அதற்கு கடையில் இருந்த யோகேஸ்வரன் மாமூல் பணம் கொடுக்க மறுத்ததால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு இருவரும் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் மளிகை கடை மூடிவிட்டு சுமார் இரவு 10:30 மணிஅளவில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது 6 பேர் கொண்ட கும்பல் யோகேஸ்வரனை வழிமறித்து கத்தி முனையில் கடத்திச் சென்றுள்ளது.

பொழிச்சலூரில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றுக்குள் கூட்டிச் சென்று கட்டாயப்படுத்தி வாயில் மதுவை ஊற்றி இரவு முழுவதும் கத்தியை பின்பக்கம் திருப்பி வைத்து அடித்து தாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.

அதன் பின்னர் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க சங்கிலி, ஒரு சவரன் மோதிரம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கேயே அடைத்து வைத்துள்ளனர்.

அங்கிருந்த ஆறு பேரும் கஞ்சா போதையில் அப்படியே மட்டையாகி தூங்கி விட்டதால் காலையில் பாழடைந்த வீட்டில் இருந்து வியாபாரி யோகேஸ்வரன் அங்கிருந்து தப்பி அவரது வீட்டுக்கு வந்துள்ளார்.

உடனடியாக யோகேஸ்வரனை 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு யோகேஸ்வரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்த புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார், யோகேஸ்வரனை கடத்திச் சென்று சித்திரவதை செய்திருந்த அந்த பாழடைந்த வீட்டுக்கு சென்று பார்த்தனர்.

அங்கு யாரும் இல்லாததால் போலீசார் கடத்திச் சென்ற நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments