கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சாக்லெட்டுகள் விற்பனை செய்த ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் கைது!

0 1441

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சாக்லெட் விற்பனை செய்த இளைஞரை கைதுசெய்த போலீசார், 40 கிலோ கஞ்சா சாக்லெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா சாக்லெட்டுகளை விற்பதற்காக கொண்டு சென்ற ராஜஸ்தானை சேர்ந்த 30 வயதான சேத்தன் என்பவனை மடக்கிப் பிடித்து கைது செய்த போலீசார், அவனிடம் இருந்த கஞ்சா சாக்லெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments