நீட் எழுத வந்த மாணவியிடம் உள்ளாடை அகற்றக் கோரிய வழக்கு.. தேசிய தேர்வு முகமை ஊழியர்கள் உள்பட 5 பெண்கள் கைது..!

0 2075
நீட் எழுத வந்த மாணவியிடம் உள்ளாடை அகற்றக் கோரிய வழக்கு.. தேசிய தேர்வு முகமை ஊழியர்கள் உள்பட 5 பெண்கள் கைது..!

கேரள மாநிலம் கொல்லத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியிடம் உள்ளாடையை அகற்றச் சொன்னதாகக் கூறப்படும் சம்பவத்தில் 5 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

தனியார் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்த மாணவியை உள்ளாடையை அகற்றக் கோரி தேர்வு அலுவலர்கள் வற்புறுத்தியதாக அளித்த புகாரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

தேசிய தேர்வு முகமை ஊழியர்கள் 3 பேர் மற்றும் தனியார் கல்லூரி பணியாளர்கள் இருவர் என 5 பெண் ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உண்மை கண்டறியும் குழுவை தேசிய தேர்வு முகமை அமைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments