கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி

0 1158

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் குரங்கு அம்மை நோய்க்கான பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை இந்தியாவிலும் பரவ தொடங்கி இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த நபருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், துபாயிலிருந்து கேரளா வந்த கண்ணூரைச் சேர்ந்த நபருக்கும் குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், புனேவில் இருந்து பரிசோதனைக் கருவிகள் கொண்டுவரப்பட்டு மாதிரிகள் சோதிக்கப்படுவதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments