மும்பையில் முன்னாள் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டேயை கைது செய்தது அமலாக்கத்துறை..!

0 969
மும்பையில் முன்னாள் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டேயை கைது செய்தது அமலாக்கத்துறை..!

மும்பை காவல்துறை முன்னாள் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டேயை தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக மேலாண்மை அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்த அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது 1997 முதலே தேசியப் பங்குச் சந்தையின் தொலைபேசி இணைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுவதாகத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பணப்பரிவர்த்தனை வழக்கில் தொடர்புடைய தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் 7 மணி நேர விசாரணைக்குப் பின் சஞ்சய் பாண்டே கைது செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments