98 வயதில் முதுகலைப் பட்டம் - விடாமுயற்சியுடன் மீண்டும் சாதித்த முதியவர்

இத்தாலியைச் சேர்ந்த கியூசெப்பே பேட்டெர்னோ (Giuseppe Paterno) என்பவர், தனது 98 வயதில் முதுகலை பட்டம் பெற்று மீண்டும் சாதித்துள்ளார்.
வறுமை காரணமாக தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய பேட்டெர்னோ, கடற்படை, ரயில்வே ஆகியவற்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இளம் வயதில் தவற விட்ட படிப்பை வயதான காலத்தில் மீண்டும் தொடர நினைத்த பேட்டெர்னோ அதற்கான கல்லூரியில் சேர்ந்து, கடந்த 2020-ஆம் ஆண்டு பாலெர்மோ பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.
வரலாறு மற்றும் தத்துவ பாடப்பிரிவில் தற்போது முதுகலைப் பட்டம் பெற்றுள்ள முதியவருக்கு, பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Comments