மரவள்ளி கிழங்கை தாக்கும் மாவுப் பூச்சியை சமாளிக்க புது ஐடியா..! தேவை ட்ரோன் தெளிப்பான்..!

0 1690
மரவள்ளி கிழங்கை தாக்கும் மாவுப் பூச்சியை சமாளிக்க புது ஐடியா..! தேவை ட்ரோன் தெளிப்பான்..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஈச்சம்பட்டி பகுதியில் பயிரிடப்பட்டு உள்ள மரவள்ளி பயிர்களை அதிகமாக தாக்கி வரும் மாவுப்பூச்சி மற்றும் செம்பேன் பூச்சிகளை கட்டுபடுத்துவது குறித்து தோட்டக்கலைதுறை அதிகாரிகள்  நேரடி பயிற்சி அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே ஈச்சம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி பயிர்களில் செம்பேன் மற்றும் மாவுப்பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படுகின்றது.

இதனை கட்டுப்படுத்தும் பயிற்சி மற்றும் செயல்விளக்கம் கூட்டம் சேந்தமங்கலம் வட்டாரம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தெளிவாக செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

விவசாயிகளின் பல்வேறு வினாக்களுக்கு தோட்டக்கலை அதிகாரிகள் நேரடியாக தோட்டங்களுக்கு சென்று மருந்து எப்படி தெளிப்பது என்று செயல் முறை விளக்கம் அளித்தனர். நாமக்கல் தோட்டக்கலை துணை இயக்குநர் கணேசன் தலைமையில் அதிகாரிகள் இதில் பங்கேற்று பயிற்சி அளித்தனர்.

இதில் பங்கேற்ற விவசாயிகள், பயிர் பாதுகாப்புக்காக அதிக அழுத்தம் கொண்ட உபகரணங்கள் வழங்க வேண்டும். விவசாய ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் வருவாய் கிராமத்திற்கு ஒன்று என பூச்சி மருந்து தெளிப்பதற்காக டிரோன் தெளிப்பான் வழங்க வேண்டும்.

மானிய விலையில் பயிர் பாதுகாப்பு மருந்து மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக தோட்டக்கலை துணை இயக்குநர் கணேசன்அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments