குளிப்பதை படமெடுத்து ரூ.16 லட்சத்தை பறித்த கந்து வட்டி காமுகன்..! குழந்தையுடன் பெண் கதறல்..!

0 12001
குளிப்பதை படமெடுத்து ரூ.16 லட்சத்தை பறித்த கந்து வட்டி காமுகன்..! குழந்தையுடன் பெண் கதறல்..!

பரமக்குடியில் 3 லட்சம் ரூபாய் கடனுக்காக பெண் குளிப்பதை படம் பிடித்து வைத்துக்கொண்டு மிரட்டி குறுகிய காலத்தில் வட்டிக்கு வட்டிபோட்டு 16 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை பறித்த கந்துவட்டி தம்பதியை போலீசார் தேடிவருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி புது நகரில் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருபவர் அபிநயா. இவரது கணவர் தமிழ்மணி வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில், பரமக்குடி மஞ்சள் பட்டினம் மெயின் வீதியில் உள்ள பைனான்ஸ் ரவிக்குமார் - வட்டி வனிதா என்பவர்களுக்கு சொந்தமான வீட்டின் மாடியில் உள்ள வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து ஒத்திக்கு குடியேறியுள்ளார்.

2017 ஆம் ஆண்டில் ரவிக்குமார் - வனிதா தம்பதியரிடம் வெற்று புரோ நோட்டில் கையெழுத்து போட்டு, அபிநயா 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி தனது தாயாருக்கு கொடுத்துள்ளார்.

ஒரே மாதத்தில் வாங்கிய பணத்தை வட்டியோடு திருப்பி செலுத்திய நிலையில் அவர் கையெழுத்து போட்ட புரோ நோட்டை திரும்ப கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரவிக்குமார் மற்றும் வனிதாவிடம் 2 வது முறையாக 10 வட்டிக்கு 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார் அபி நயா, அந்த பணத்தையும் அதற்குரிய வட்டியையும் கேட்டு அவரது வீட்டிற்கு பலமுறை வந்து ரவிக்குமார் பணம் வசூல் செய்து சென்றதாக கூறப்படுகின்றது.

அப்போது ரவிக்குமார், அபிநயாவுக்கே தெரியாமல் அவர் குளிப்பதை ரகசியமாக படம் பிடித்து வைத்திருந்ததாகவும், ஒரு கட்டத்தில் வாங்கிய கடனுக்கு மேல் பணம் கட்டிய நிலையில் கூடுதல் பணம் கட்ட மறுத்த அபிநயாவிடம் அவருக்கு தெரியாமல் எடுத்து வைத்திருந்த அபி நயாவின் குளியல் புகைப்படத்தை காண்பித்து மிரட்டி பணத்தைப் பறித்துக் கொண்டதாக மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார் அபிநயா..!

அபி நயாவின் குடும்பத்துக்கு சொந்தமான காரை இரவல் வாங்கிச் சென்ற ரவிக்குமார் காரில் இருந்த அவரது காசோலைகளை திருடி எடுத்து வைத்துக் கொண்டும், புரோநோட்டுடன் போலி ஆவணங்களை தயாரித்தும் ஒட்டு மொத்தமாக இதுவரை 16 லட்சத்தும் 90 ஆயிரம் ரூபாயை மிரட்டி வாங்கிக் கொண்டு நீதிமன்றத்தில் இன்னும் பணம் தரவேண்டி இருப்பதாக ரவிக்குமாரும் அவரது மனைவி வனிதாவும் வழக்கு தொடர்ந்து மிரட்டுவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

கந்து வட்டி தொல்லைக்கு பயந்து கொண்டு தற்கொலை செய்து கொள்ள இருந்த நேரத்தில் சகோதரனால் காப்பாற்றப்பட்ட அபி நயா, தனது குழந்தையை பள்ளிக்கூடத்துக்கு கூட அனுப்ப இயலாமல் கண்ணீருடன் தவித்து வரும் நிலையை அறிந்து பரமக்குடி போலீசார் ரவிக்குமார் மற்றும் வனிதா மீது கந்துவட்டி வழக்கு பதிவு செய்து தலைமறைவான கந்து வட்டி தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments