கிரில் கேட்டை உடைத்து நகை, பணம் திருட்டு ; வீட்டு உரிமையாளரிடம் சிக்கிய திருடனுக்கு தர்ம அடி

0 1519
கிரில் கேட்டை உடைத்து நகை, பணம் திருட்டு ; வீட்டு உரிமையாளரிடம் சிக்கிய திருடனுக்கு தர்ம அடி

சென்னை குரோம்பேட்டையில், வீட்டு உரிமையாளரிடம் சிக்கி தர்ம அடி வாங்கிய திருடன் தனக்கு ஈரலில் ஓட்டை உள்ளதாகவும், உடலில் 2 இடத்தில் டியூப் வைத்துள்ளதாகவும் கூறி தப்ப முயன்றான்.

மணிமாறன் என்பவர், குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய போது கிரில் கேட் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 சவரன் நகை, 10,000 ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது.

வீடருகே சத்தம் வருவதை கவனித்த குடும்ப உறுப்பினர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். யாரும் வீட்டை விட்டு வராததால் அந்த திருடனை அவர்களே பிடித்துள்ளனர். குடியிருப்புகளில் உள்ள மற்ற வீடுகளை திருடன் வெளிப்புறமாக தாளிட்டுள்ளது பின்னர் தெரியவந்தது.

அங்கிருந்தவர்கள் அவனை அடித்த போது பல்வேறு உடல் உபாதைகள் உள்ளதாக கூறி உள்ளான். அவனை மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments