மின்கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்பாட்டம் - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

0 1021

மிழகத்தில் மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து வருகிற 25 ஆம் தேதி அதிமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2022-23 பட்ஜெட்டை தாக்கல் செய்த போது வரியில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளோம் என்று மார்தட்டிக் கொண்ட திமுக அரசு, தற்போது அனைத்து துறைகளிலும் வரி உயர்வு, கட்டண உயர்வு என்று அறிவித்து மக்களை ஏமாற்றி வருவதாக கூறியுள்ளார்.

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு கட்டணங்கள் உயர்வு, விலைவாசி உயர்வு, மட்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது போன்ற பல்வேறு துன்பங்களை மக்களுக்கு அளித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments