திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழையா விருந்தாளிகளாக வந்த ராட்சத அலைகள்.. சிதறி ஓடிய உறவினர்கள்..

0 1431

மெக்சிகோவின் கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டிருந்த டார்பி புயல் எதிரொலியாக ஹவாயின் கைலுவா - கோனா பகுதியில் உள்ள கடற்கரையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்குள் திடீரென ஆக்ரோஷமாக கடல் அலைகள் புகுந்தன.

கடற்கரையில் புல்வெளி அமைந்துள்ள பகுதியில் டிலான் - ரிலே மர்பி தம்பதியரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது அழையா விருந்தாளிகளாக ராட்சத அலைகள் சீறிப்பாய்ந்து வந்தன. உடனே அங்கிருந்த உறவினர்கள் சிதறியடித்து ஓடினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments