தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமார் தேர்வு..!

0 2088

தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாரும், சட்டமன்ற எதிர்கட்சி துணை செயலாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, எதிர்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கடந்த 17 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் அலுவலகத்தில் அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments