உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி - இந்தியாவுக்கு வெண்கலம்

0 1070

தென்கொரியாவின் சாங்வான் நகரில்நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இன்று இந்திய அணி வெண்கலம் வென்றது.

இன்று நடந்த வெண்கலத்துக்கான 25 மீட்டர் ராபிட் ஃபயர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான், அனீஷ் பன்வாலா ஜோடி , செக் குடியரசின் டெடோவா, போத்ரஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.

இதில் இந்திய அணி 16-12 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. சாங்வான் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலங்கள் என மொத்தம் 14 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments