கள்ளக்குறிச்சி கலவரம்: காணொலி மூலம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை!

0 1313

கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி மூலம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இல்லத்தில் இருந்தபடி முதலமைச்சர்  இந்த ஆலோசனையில் பங்கேற்றார். அமைச்சர்கள் எ வ வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி , உள்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள், டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.

கள்ளக்குறிச்சி வன்முறைக்கான காரணம், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க குழு அமைப்பது, சம்பந்தப்பட்ட பள்ளியில் படிக்கும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments