கள்ளக்குறிச்சி வன்முறை: வாட்ஸ் அப் மூலம் குழு அமைத்து வதந்தி பரப்பிய 4 பேர் போலீசில் சிக்கினர்!

கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக, சென்னையில் வாட்ஸ் அப் மூலம் குழு அமைத்து வதந்தி பரப்பிய 4 பேர் போலீசில் சிக்கினர்.
கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக ஒரு பள்ளி மாணவன், 3 கல்லூரி மாணவர்கள் என 4 பேரை சென்னை அண்ணாசாலை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் ஒரு குழு தொடங்கப்பட்டு, அந்த குழுவின் மூலமாகவே ஏராளமானோர் திரண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments