கலவரத்தில் சான்றிதழ்களை இழந்த பள்ளி மாணவர்களுக்கு விரைவாக சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்!

கள்ளக்குறிச்சி கலவரத்தில் சான்றிதழ்களை இழந்த பள்ளி மாணவர்களுக்கு வருவாய்துறை மூலம் சான்றிதழ்கள் வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி கலவரத்தில் மாற்றுச் சான்றிதழ்கள் மட்டுமின்றி பிறப்பு சான்றிதழ் உட்பட பல சான்றிதழ்களை இழந்த பள்ளி மாணவர்களுக்கு, வருவாய்துறை மூலம் சான்றிதழ்கள் வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Comments