இலங்கை அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா அறிவிப்பு!

0 666

நாளை நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பதிவில், தான் நேசிக்கும் நாட்டின் நலனுக்காக விலகுவதாக கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டலஸ் அழகபெருமவை வெற்றி பெற கடுமையாக உழைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அதிபர் தேர்தலில் இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, மகிந்த ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த டலஸ் அழகப்பெரும, ஜனதா விமுக்தி பெரமுன (Janatha Vimukthi Peramuna) கட்சியின் அணுரகுமார திசநாயக்க ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments