பள்ளி நிர்வாகம் கடுமையாக கண்டித்ததால் மனமுடைந்து பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை முயற்சி

காஞ்சிபுரம் அருகே பள்ளி நிர்வாகம் கண்டித்ததால் பதினொராம் வகுப்பு படிக்கும் மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் படிக்கும் இஷிகாந்த் என்ற மாணவனை பள்ளி நிர்வாகம் கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த அந்த மாணவன் பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற போது சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளான்.
இதனை அடுத்து அவன் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான். இந்நிலையில் எந்த வித அசம்பாவிதமும் நேராத வகையில் அந்த பள்ளிக்கூடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
Comments