மானியக் கடன் பெற்றுத் தருவதாக கூறி 72 பெண்களிடம் ரூ.13 லட்சம் மோசடி.. பெண் மீது ஆட்சியர் அலுவலகத்தில் புகார்..!

0 1004
மானியக் கடன் பெற்றுத் தருவதாக கூறி 72 பெண்களிடம் ரூ.13 லட்சம் மோசடி.. பெண் மீது ஆட்சியர் அலுவலகத்தில் புகார்..!

தேனி மாவட்டத்தில் அரசு மானியம் கடன் பெற்றுத் தருவதாக கூறி 72 பெண்களிடம் நூதன முறையில் 13 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் மீது ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தேனி பழனிசெட்டிபட்டியில் சென்னையை தலைமை இடமாக கொண்டு ஸ்ரீ ஹனுமான் ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது.

இந்த நிறுவனம் சார்பில் தேனி,போடி,கோட்டூர், சீலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வந்த வீட்டு பெண்களிடம் வீட்டில் இருந்தவாறு மெழுகுவத்தி தயாரித்து வாரம் 5000 ரூபாய் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறப்பட்டுள்ளது.

இதற்காக கடனுதவி பெற்றுத் தர தலா 19ஆயிரத்து 300ரூபாய் 72பேரிடம் பெறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments