பூட்டிய வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை- ரூ.3 லட்சம் பணம் கொள்ளை... வெளியான சிசிடிவி காட்சிகள்

ஒசூர் அருகே பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கர்நாடக மாநில எல்லையிலுள்ள ஆனேக்கல் பகுதியில் மஞ்சு நாத் என்பவர் தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 8 லட்சம் ரூபாய் மதிப்புடைய நகைகளையும், ரூபாய் 3 லட்சம் ரொக்க பணத்தையும் வீட்டில் வைத்து விட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
இதனையறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையிட்டுச்சென்றுள்ளனர். ஒரே மாதிரியான உடையணிந்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments