குடிபோதையில் மகனை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட தந்தை... துப்பாக்கி குண்டு பாய்ந்து 5 சிறுவர்கள் படுகாயம்

0 1678

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மகனை நாட்டுத் துப்பாக்கியால் சுடும் பொழுது குண்டு தாக்கி அருகில் இருந்த 5 சிறுவர்கள் காயமடைந்தனர்.

நலமங்காட்டைச் சேர்ந்த கரியராமன் என்பவர் குடிபோதையில் நேற்று மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட போது அவரது மகன் ஏழுமலை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த  கரியராமன் வீட்டில் இருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து மகனை நோக்கி சுட்டுள்ளார்.

மகன் சற்று விலகவே துப்பாக்கியில் இருந்து பாய்ந்த பால்ஸ் குண்டுகள் சுவற்றில் பட்டு தெருவில் விளையாடி கொண்டிருந்த  5 சிறுவர்கள் மீது பட்டுள்ளது. இதில் காயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குண்டுகள் அகற்றப்பட்டன.  இதுதொடர்பான புகாரின் பேரில் கரியராமன் கைது செய்யப்பட்டார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments