போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.20ஆயிரம் லஞ்சம் வாங்கிய பணி மேற்பார்வையாளர் கைது

0 896

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பணி மேற்பார்வையாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.   

போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணி மேற்பார்வையாளராக புருஷோத்தமன் மற்றும்  தற்காலிக கணிணி அலுவலராக ராஜ்குமார் என்பவரும்  பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் அத்திமூர் ஊராட்சியில் ஒப்பந்ததாரர் ராஜாராம் என்பவருக்கு பதினைந்தாவது நிதி  குழுவில் 2 லட்சம் ரூபாய் செலவில் பக்க கால்வாய் கட்டியதற்கான உரிய பில்லை கடந்த 6 மாதங்களாக வழங்காமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக  ராஜாராம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் அவர்களிடம் விசாரணை நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments