மேடையில் நடித்துக்கொண்டிருந்த நாடகக்கலைஞர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த குப்பந்துறை கிராமத்தில் நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நாடகக்கலைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
மழை பெய்ய வேண்டி ஊரில் நேற்றிரவு இரணியன் நாடகம் நடந்துகொண்டிருந்தது. அப்போது நாரதர் வேடமிட்டு நடித்துக்கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த நாடகக்கலைஞர் ராஜய்யன், நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார்.
பின்னர் சக கலைஞர்கள் அவரை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Comments