8 வயது சிறுமியை கடத்த முயன்ற ஐஸ் வியாபாரியை கைது செய்த போலீசார்.!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 8 வயது சிறுமியை கடத்த முயன்ற ஐஸ் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
ஐஸ் வாங்குவதற்காக தனியாக சென்ற அந்த சிறுமியை முகமது ரபிக் என்ற அந்த 50 வயது ஐஸ் வியாபாரி அருகே இருந்த கோவிலின் பின்புறம் அழைத்துக்சென்று கைகளை கட்டி வாயில் துணியை அடைத்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்ட 5 வயது சிறுவன் ஒருவன் சத்தம் போடவே பெண்கள் திரண்டனர். அவர்களை பார்த்ததும் அந்த ஐஸ் வியாபாரி சிறுமியை விட்டு விட்டு தப்பியோடினான். இருப்பினும் பெண்கள் விடாமல் துரத்திச்சென்று ஐஸ் வியாபாரியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த நபர் குற்றத்தை ஒப்புகொண்டதால், போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேடசந்தூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.
Comments