கோயம்புத்தூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற 60 வயது நபர்.!

0 24161

கோயம்புத்தூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற 60 வயது நபரின் கணுக்கால் ரயில் சக்கரத்தில் சிக்கி துண்டானது. அசாமில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் அரோணை எக்ஸ்பிரஸ் ரயில் கோயம்புத்தூர் மத்திய ரயில் நிலையம் வந்த போது நடைமேடையில் நின்ற மகேஷ் என்பவர் திடீரென ரயில் முன் பாய்ந்தார்.

ரயில் மோதி தண்டவாளத்திற்கு இடையே விழுந்த அவரின் கணுக்கால் மீது ரயில் சக்கரம் ஏறியது. 8 ரயில் பெட்டிகள் கடந்து சென்ற பின், ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த மகேஷை ரயில்வே போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments