சர்வீஸ் செய்ய விடப்பட்ட ராயல் என்ஃபீல்டு புல்லட்டு திருட்டு...! திருடு போன புல்லட்டிற்கு பதிலாக 2 புதிய புல்லட்டை எடுத்துச் சென்ற உரிமையாளர்

0 5031

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ராயல் என்ஃபீல்டு ஷோரூமில் சர்வீஸ் முடித்து டெலிவரிக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த புல்லட்டை மர்ம நபர் திருடிச் சென்றதால் அதன் உரிமையாளர் ஷோரூமில் இருந்து இரண்டு புதிய புல்லட்டுகளை எடுத்துச்சென்றார்.

ஆத்திபட்டி விரிவாக்க பகுதியை சேர்ந்த சோலை என்பவர் தனது புல்லட் வாகனத்தை காந்திநகரில் உள்ள ராயல் என்ஃபீல்டு ஷோரூமில் சர்வீஸ் செய்ய விட்டுள்ளார்.

சர்வீஸ் முடித்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம் காணாமல் போனதையடுத்து சர்வீஸ் நிலைய மேலாளரை தொலைபேசியில் ஆபாசமாக பேசிய சோலை, தனது நண்பர்களுடன் ஷோரூமிற்கு வந்து இரண்டு புதிய புல்லட்டுகளை எடுத்துச் சென்றதால் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments