கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மேலும் இரு ஆசிரியர்கள் கைது!

0 5166

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மேலும் இரு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனியாமூர் பள்ளியில் பிளஸ் டூ மாணவி உயிரிழந்த நிலையில் நேற்று பயங்கர கலவரம் வெடித்தது. மாணவியின் மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இன்று வேதியியல் ஆசிரியர் ஹரிப்ரியா, கணித ஆசிரியர் க்ருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நேற்றைய கலவரத்தின் போது பள்ளியில் இருந்த 21 பேருந்துகள், இரண்டு டிராக்டர்கள், 2 டிப்பர் லாரிகள் மற்றும் ஒரு ஜேசிபி முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய கலவரம் தொடர்பாக 320 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 108 பேர் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனிடையே கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் தவறான தகவல்களை பதிவிட்டதாக கரூரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments