இலங்கையில் மீண்டும் அவசரநிலையை பிறப்பித்தார் ரணில் விக்கிரமசிங்கே

0 905

இலங்கையில் மீண்டும் அவசர நிலையை பிறப்பித்து இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.

பொது மக்களின் பாதுகாப்பு நலன், பொது ஒழுங்கை பாதுகாத்தல் மற்றும் சமூக வாழ்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை பராமரிப்பதற்கு அவசரநிலை உகந்தது என்பதால், அது பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிபர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஜூலை 20 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இன்று முதல் அவசர நிலை அமலுக்கு வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments