கோவையில் நீட் தேர்வு எழுதிய 70 வயது முதியவர்.. நீட் குறித்த பயத்தை போக்கவே தேர்வு எழுதியதாக தெரிவிப்பு..!

0 4280
கோவையில் நீட் தேர்வு எழுதிய 70 வயது முதியவர்.. நீட் குறித்த பயத்தை போக்கவே தேர்வு எழுதியதாக தெரிவிப்பு..!

கோவையில் 70 வயது முதியவர் ஒருவர் நீட் தேர்வு எழுதி வியப்பை ஏற்படுத்தி உள்ளார்.

விளாங்குறிச்சி சாலை விநாயகபுரத்தை சேர்ந்தவர் பிரின்ஸ் மாணிக்கம். 70வயதான இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர் பியூசி படிப்பு படித்துள்ளார்.

சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என்ற கனவு இருந்ததாகவும் ஆனால் சீட் கிடைக்காத தால் தம்மால் படிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

நீட் தேர்வு குறித்து மாணவ-மாணவிகளுக்கு பயத்தை போக்கவே இந்த தேர்வை எழுதியதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments