இளம்பெண் செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு.. உரிய அனுமதி இன்றி இயங்கிய தனியார் தங்கும் விடுதிக்கு சீல்..!

0 2212
இளம்பெண் செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு.. உரிய அனுமதி இன்றி இயங்கிய தனியார் தங்கும் விடுதிக்கு சீல்..!

நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதையில் அனுமதி இல்லாமல் இயங்கிய தனியார் தங்கும் விடுதிக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வினிதா சவுத்ரி என்ற ஐடி நிறுவன ஊழியர் சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் கல்லட்டி மலைப்பாதையில் தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்தார்.

பின்னர் அவர் மாலையில் ஆற்றோரத்தில் நின்று செல்ஃபி புகைப்படம் எடுத்து கொண்டு இருந்த போது தவறி விழுந்து காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அந்த விடுதி உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments