விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு பற்றி முக்கிய ஆலோசனை.. "பயணிகள் பாதுகாப்பில் சமரசம் செய்ய வேண்டாம்" - விமானப் போக்குவரத்து அமைச்சர்

0 968
விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு பற்றி முக்கிய ஆலோசனை.. "பயணிகள் பாதுகாப்பில் சமரசம் செய்ய வேண்டாம்" - விமானப் போக்குவரத்து அமைச்சர்

அண்மையில் விமானங்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை எழுந்த நிலையில், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பயணிகளின் உயிர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி அவர் உத்தரவிட்டார். இதில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்றும் அவர் கூறினார்.

ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானத்தின் எஞ்சின் பழுதானதால் அவசரமாக பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது.

இதே போல் வடோதரா செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் கோளாறு காரணமாக ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

இதே போன்று சில ஸ்பைஸ் ஜெட் விமானங்களும் இயந்திரக் கோளாறு காரணமாக திருப்பி விடப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments