பாஜக எம்.எல்.ஏக்கள் 69 பேர் நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.. கட்சி மாறி குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதைத் தவிர்க்க ஏற்பாடு..!

0 1618
பாஜக எம்.எல்.ஏக்கள் 69 பேர் நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.. கட்சி மாறி குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதைத் தவிர்க்க ஏற்பாடு..!

குடியரசுத் தேர்தலில் வாக்களிக்க உள்ள மேற்குவங்க பாஜக எம்.எல்,ஏக்கள் 69 பேரும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கொல்கத்தாவின் 5 நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அவர்கள் இன்று வாக்களிக்க சட்டமன்றத்துக்கு வர உள்ளனர்.

எம்.எல்.ஏக்களுக்கு வாக்களிப்பது எப்படி என்ற பயிற்சி அளிக்கவே அழைத்துச் சென்றதாக கட்சித்தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ள போதும், கட்சி மாறி வாக்களித்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையால்தான் பாஜக எம.எல்.ஏக்கள் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதே போல் மகாராஷ்ட்ராவிலும் பாஜக எம்.எல்.ஏக்கள் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments