இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அசத்தல் வெற்றி - ரிஷாப் பன்ட் முதல் சர்வதேச சதம்..!

0 9021
இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அசத்தல் வெற்றி - ரிஷாப் பன்ட் முதல் சர்வதேச சதம்..!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியை 5-வது விக்கெட் வித்தியாசத்தில் வென்று, இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 45 புள்ளி 5 ஓவர்களில் 259 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 60 ரன்கள் சேர்த்தார்.

தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியில், விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் நங்கூரம் போல் நிலைத்து நின்று தனது முதல் சர்வதேச ஒரு நாள் சதத்தை அடித்தார்.

42 புள்ளி 1 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. ரிஷப் பன்ட் 125 ரன்களுடன் களத்தில் நின்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments