கடைசி ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைப்பு - டசால்ட் ஏவியேஷன்

0 1002
கடைசி ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடைசி ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது. 

சுமார் 63 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, 36 ரபேல் போர் விமானங்களை வாங்க 2016ஆம் ஆண்டில் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி பல கட்டங்களாக 35 விமானங்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்திய விமானப்படை கோரிய 13 மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன், இறுதிக் கட்ட சோதனைக்காக கடைசி விமானம் பிரான்சில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த விமானத்திற்கான சோதனை முடிந்ததை தொடர்ந்து பிரான்சில் இந்திய விமானப் படை அதிகாரிகளிடம் அவை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments