கும்பகோணத்தில் ஒரே பெயர் கொண்ட பள்ளிகளில் நீட் தேர்வு மையம் - தேர்வர்கள் குழப்பம்..!

0 14639
கும்பகோணத்தில் ஒரே பெயர் கொண்ட பள்ளிகளில் நீட் தேர்வு மையம் - தேர்வர்கள் குழப்பம்..!

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் உள்ள ஒரே பெயர் கொண்ட பள்ளிகளில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டதால், குழப்பமடைந்த தேர்வர்கள் இருவேறு இடங்களுக்கும் மாறி மாறிச் சென்றனர். 

தாமரை இன்டர்நேஷனல் பள்ளி தஞ்சாவூரிலும், கும்பகோணத்திலும் உள்ளது. இந்த இரு பள்ளிகளிலும் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்ட நிலையில், கும்பகோணம் மையத்திற்கு செல்ல வேண்டியவர்கள் தஞ்சாவூருக்கும், தஞ்சாவூர் மையத்திற்கு செல்ல வேண்டியவர்கள் கும்பகோணத்திற்கும் மாறி மாறிச் சென்றதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இரு தேர்வு மையங்களுக்கும் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் நிலையில், தாமதமாக வந்தவர்களுக்கு அரை மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments