கன்னியாகுமரி தேநீர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் காயம்.. தலா ரூ.50,000 நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு..!

0 1022
கன்னியாகுமரி தேநீர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் காயம்.. தலா ரூ.50,000 நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு..!

நாகர்கோவிலில், தேநீர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 8 பேருக்கு, தலா 50,000 ரூபாய் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பார்வதிபுரம் சந்திப்பில் உள்ள அந்த தேநீர் விடுதியில், அடுப்பில் இருந்து இறக்கிய வடை சட்டியை சிலிண்டர் மீது வைத்ததால், சூடு தாங்காமல் சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் தேநீர் கடை ஊழியர்கள் 3 பேர் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments