ரூ.1 கோடி கேட்டு கடத்திய நான்கு வயது குழந்தை பத்திரமாக மீட்பு.. மகிழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடிய போலீசார்..!

0 1822
ரூ.1 கோடி கேட்டு கடத்திய நான்கு வயது குழந்தை பத்திரமாக மீட்பு.. மகிழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடிய போலீசார்..!

கள்ளக்குறிச்சி அருகே ஒரு கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட நான்கு வயது குழந்தையை காரில் வைத்துக் கொண்டு வலம் வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

அக்கராயபாளையம் பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த லோகநாதனின் இளைய மகன் தருண் ஆதித்யாவை, கடந்த 7ம் தேதி மர்ம நபர்கள் வீடு புகுந்து கடத்தி சென்றனர்.

குழந்தை உயிருடன் கிடைக்க வேண்டுமென்றால் ஒரு கோடி ரூபாய் தர வேண்டும் என அவரது தாய் கௌரிக்கு மிரட்டல் விடுத்த கும்பலின் செல்போன் இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீசார், சின்னசேலம் அருகே பங்காரம் கிராமத்தில் காருக்குள் இருந்த குழந்தையை மீட்டு, மகிழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments