கள்ளக்குறிச்சியில் நிலவும் சூழல் வருத்தமளிக்கிறது... பொதுமக்கள் அமைதி காக்க முதலமைச்சர் வேண்டுகோள்!

0 5777
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்து பொதுமக்கள் அமைதி காக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்து பொதுமக்கள் அமைதி காக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து சமூகவலைதளங்களில் பதிவிட்ட அவர், கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிப்பதாகவும், காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்கு செல்ல உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments