வன்முறையை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் - டிஜிபி சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கை..!

0 8303

கள்ளக்குறிச்சி அருகே கணியாமூரில் மூண்டுள்ள கலவரம் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர் சந்திப்பு

+2 மாணவி உயிரிழப்பு குறித்து கள்ளக்குறிச்சி எஸ்.பி தலைமையில் விசாரணை நடைபெறுகிறது - டிஜிபி

போராட்டம் என்ற பெயரில் போலீஸ் மீதும், வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர் - டிஜிபி

போராட்டத்தில் ஈடுபடுவோர் உடனடியாக கலவரத்தை, வன்முறையை நிறுத்திக் கொள்ள வேண்டும் - டிஜிபி

போராட்டத்தில் ஈடுபடுவோர் இனியும், கலவரத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டிஜிபி

கலவரம் மூண்டுள்ள கணியாமூர் பகுதியில், செல்போன் மூலம் வதந்திகளை பரவுவதை தடுக்கும் வகையில் ஜாமர்கள் பொருத்தம்

போராட்டக்காரர்கள் ஒன்றிணைவதைத் தடுக்கும் வகையில், நெட்வொர்க்குகள் தடை செய்யப்பட்டு, போலீசார் ஜாமர்களை பொருத்தியுள்ளனர்

காவலர்கள் ஒருபுறம் தாக்கப்பட்டாலும், தொடர்ந்து அதிவிரைவுப்படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது - டிஜிபி

பள்ளிக்குள் நுழைவதும், காவல்துறையை தாக்குவது சரியான போக்கு அல்ல; வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டிஜிபி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments