பிரான்சில் உள்ள ஜிராண்ட் மாகாணத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ - 14,000 பேர் வெளியேற்றம்!

0 728

தென்மேற்கு பிரான்சில் உள்ள ஜிராண்ட் மாகாணத்தில் உள்ள லான்டிராஸ் பகுதியில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.

அதை கட்டுப்படுத்த தீயணைப்பு விமானங்களின் உதவியுடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். அந்த காட்சிகள் வான் வழியாக சென்று படம்பிடிக்கப்பட்டுள்ளன.

வெப்பநிலை அதிகரித்து காணப்படுவதால் தீ வேகமாக பரவி வரும் சூழலில், அங்கு ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு பிரான்சில் இதுவரை சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலான வனப்பகுதியை காட்டுத்தீ கபளீகரம் செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments