பா.ஜ.க. குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு

0 1888
பா.ஜ.க. குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க.வின் உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டத்திற்கு பின் வேட்பாளரின் பெயரை அக்கட்சியின் தலைவரான நட்டா அறிவித்தார். 2019ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்க மாநில ஆளுநராக உள்ள ஜெகதீப் தங்கர், மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த அவர், அம்மாநிலத்தில் எம்.பி.யாகவும், எம்.எல்.ஏ.ஆகவும் பதவி வகித்துள்ளார். விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோரின் நல்வாழ்வுக்காக ஜெகதீப் தங்கர் பாடுபட்டவர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதியன்று குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments