பஞ்சாப் மாநிலம் பட்டின்டாவில் மகாத்மா காந்தி சிலை உடைப்பு.. சிலையின் தலையை எடுத்துச் சென்றனர்..!

பஞ்சாப் மாநிலம் பட்டின்டாவில் மகாத்மா காந்தி சிலை உடைப்பு.. சிலையின் தலையை எடுத்துச் சென்றனர்..!
பஞ்சாப் மாநிலம் பட்டின்டா நகரில் மகாத்மா காந்தியின் உருவச்சிலையை சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தியுள்ளனர்.
அங்குள்ள ரமா மண்டி என்ற இடத்தில் பூங்கா ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த சிலையை உடைத்த மர்ம நபர்கள் சிலையின் தலைபாகத்தை மட்டும் கொண்டு சென்று விட்டனர்.
சிலை அமைக்கப்பட்டிருந்த பகுதியில் உள்ள சிசி டிவி கேமரா காட்சிகளை வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கனடாவின் ஓன்டோரியா மாகாணத்தில் கார்டன் அவின்யு என்ற இடத்தில் இதே போன்று மகாத்மா காந்தி சிலை ஒன்று சில தினங்களுக்கு முன் சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments