கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவாக இருந்த கல்லூரி முதல்வர், விடுதி காப்பாளர் போக்சோவில் கைது..!

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவாக இருந்த கல்லூரி முதல்வர், விடுதி காப்பாளர் போக்சோவில் கைது..!
கரூர் மாவட்டத்தில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தலைமறைவாக இருந்த தனியார் நர்சிங் கல்லூரி முதல்வர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்த 17 வயது மாணவிக்கு கல்லூரி முதல்வர் செந்தில்குமார், தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அதற்கு விடுதி காப்பாளர் அமுதவள்ளி மற்றும் சமையலர் மகாலட்சுமி உடந்தையாக இருப்பதாகவும் மாணவியின் பெற்றோர் கரூர் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தனர்.
அதன் பேரில் 3 பேரும் மீது போக்சோ சட்டத்தின் வழக்கு பதியப்பட்ட நிலையில், மேல்மருவத்தூரில் தலைமறைவாக இருந்த செந்தில்குமார் மற்றும் விடுதி காப்பாளர் அமுதவள்ளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
Comments