தண்டவாளத்தில் தவறி விழுந்த நபரை ரயில் வருவதற்குள் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே போலீசார்..!
பெங்களூரு கே.ஆர்.புரம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த நபரை, ரயில் வருவதற்குள் ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நடைமேடையில் நடந்து வந்துக் கொண்டிருந்த போது தண்டவாளத்தில் தவறி விழுந்த அந்த நபர், பிளாட்பாரத்தில் ஏற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்துள்ளார்.
அவ்வழியாக ரயில் வருவதைக் கண்டதும் ஓடிச் சென்ற ரயில்வே போலீசார், அவரை பாதுகாப்பாக மேலே தூக்கிய நிலையில், அடுத்த சில நொடிகளில் ரயில் அவ்வழியாகச் சென்றது.
Prompt response by RPF personnel saved the precious life of a man who slipped and fell on tracks minutes before the arrival of a train at KR Puram Railway Station, Bengaluru. pic.twitter.com/P0CXy3JfvH
— Ministry of Railways (@RailMinIndia) July 16, 2022 ">
Prompt response by RPF personnel saved the precious life of a man who slipped and fell on tracks minutes before the arrival of a train at KR Puram Railway Station, Bengaluru. pic.twitter.com/P0CXy3JfvH
— Ministry of Railways (@RailMinIndia) July 16, 2022
Comments