காசா பகுதியில் ராக்கெட் தயாரிப்பு தளத்தை குறிவைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்!

காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரால் நடத்தப்பட்டு வரும் ராக்கெட் தயாரிப்பு தளத்தை குறிவைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் இன்று தாக்குதல் நடத்தின.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலில் இருந்து சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டு சென்றதை பின்னர் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே, காசா பகுதியில் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 ஏவுகணைகள் வீசப்பட்டதில் ஒன்று வானிலேயே தாக்கி அழிக்கப்பட்டதாகவும், 2 ஏவுகணைகள் வெட்டவெளியில் விழுந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
Comments