டெல்லியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட 4 சிறுவர்கள் கைது.!
டெல்லியில் ஜஹாங்கிர்பூரி என்ற இடத்தில் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட குற்றத்திற்காக 4 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பூங்கா ஒன்றிற்கு அருகே அமர்ந்து கொண்டிருந்த அந்த நபரை நான்கு சிறுவர்களில் ஒருவன் நெருங்கிச்சென்று தலையில் துப்பாக்கியால் சுட்ட காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
துப்பாக்கியால் சுடப்பட்ட அந்த நபர் சம்பந்தப்பட்ட சிறுவர்களில் ஒருவனின் தந்தையை கடந்த 7 மாதங்களுக்கு முன் தாக்கியதாகவும், அதற்கு பழிவாங்குவதற்காகவே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த அந்த நபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments